சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை

கண் சிகிச்சைக்காக அடியாலா சிறையில் இருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு இம்ரான் கான் நேற்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை
Published on: 

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 73). பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இம்ரான்கான் இழந்தார். மேலும், பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.

இம்ரான் கான் கைது

இதனை தொடர்ந்து இம்ரான்கான் மீது ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளில் 2023 ஆகஸ்ட் 5-ந்தேதி கைது செய்யப்பட்ட இம்ரான்கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளாக சிறை

இதையடுத்து இம்ரான்கான் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கானின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக கூறப்படும் நிலையில் அவரை பார்க்க குடும்ப உறுப்பினர்களுக்கு சிறையில் அனுமதி வழங்கப்படவில்லை.

குறிப்பாக அவரது கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மேலும், இம்ரான் கானுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பாகிஸ்தான் அரசு மறுத்து வருவதாக கூறி, சுப்ரீம் கோர்ட்டில் இம்ரான் கானின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை

அந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு, இம்ரான் கானுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. ஆனால் அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம்(PIMS) அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

கண் சிகிச்சை

இந்த நிலையில், உடல் பரிசோதனை மற்றும் கண் சிகிச்சைக்காக, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் இருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு இம்ரான் கான் நேற்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்குள்ள கண் மருத்துவர்கள், இம்ரான் கானின் வலது கண்ணில் மருத்து செலுத்தி சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இம்ரான் கான், மீண்டும் ராவல்பிண்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

X