பிரான்ஸ் அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு


பிரான்ஸ் அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
x

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அடுத்த மாதம் டெல்லி வர உள்ளார்.

பாரிஸ்,

6 நாட்கள் அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பிரான்ஸ், லக்சம்பர்க் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், பிரான்ஸ் சென்றுள்ள ஜெய்சங்கர் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இதனிடையே, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அடுத்த மாதம் டெல்லி வர உள்ளார். அவர் டெல்லியில் நடைபெற உள்ள செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story