கரடிகளை அழிக்க அனுமதி அளித்தது ஜப்பான்.. காரணம் இதுதான்..!

ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சக தகவலின்படி, 2023-ம் நிதியாண்டில் 19 மாகாணங்களில் கரடிகள் தாக்கியதில் 219 பேர் பாதிக்கப்பட்டனர்.
கரடிகளை அழிக்க அனுமதி அளித்தது ஜப்பான்.. காரணம் இதுதான்..!
Published on

டோக்கியோ:

ஜப்பான் நாட்டில், அரசு மானியத்தின் உதவியுடன் வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளையும் சேர்த்துள்ளது. கரடிகளின் எண்ணிக்கை பெருகி, மனிதர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஜப்பானில் உள்ள ஷிகோகு பகுதியைச் சேர்ந்த கருப்பு கரடிகளைத் தவிர, பிற கரடிகள் 'வனவிலங்கு மேலாண்மை' பட்டியலில் சேர்க்கப்படும் என ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. கருப்பு கரடிகளின் எண்ணிக்கை பெருகவில்லை என்பதால் இந்த பட்டியலில் சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழுப்பு நிற கரடிகள் வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோவில் வாழ்கின்றன. ஆசிய கருப்பு கரடிகள் நாட்டின் 47 மாகாணங்களில் 33 மாநிலங்களில் வாழ்கின்றன, அவற்றின் எண்ணிக்கை மற்றும் வாழ்விடங்கள் பல பகுதிகளில் அதிகரிக்கின்றன.

கரடி தாக்குதல் சம்பவங்கள் அதிகரிக்கும்போது, இலையுதிர் காலத்தில் கரடிகளை அழிப்பதற்காக அரசு மானியங்களை வழங்க தொடங்கும் என சுற்றுச்சூழல் துறை மந்திரி தெரிவித்தார்.

ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சக தகவலின்படி, 2023-ம் நிதியாண்டில் 19 மாகாணங்களில் கரடிகள் தாக்கியதில் 219 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2006-ல் கரடி தாக்குதல் விவரங்கள் பதிவு செய்யப்பட்டதில் இருந்து அதிகபட்ச பாதிப்பு ஆகும். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com