தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ள வடகொரியாவுக்கு ஜப்பான் கடும் கண்டனம்!

வடகொரியாவுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ள வடகொரியாவுக்கு ஜப்பான் கடும் கண்டனம்!
Published on

டோக்கியோ,

கம்போடியாவில் நடந்த ஆசியான் மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென் கொரிய அதிபருடனும், ஜப்பான் பிரதமருடனும் முத்தரப்பு உச்சி மாநாடு நடத்தி, பேசியபோது, அவர்கள் வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுக்கு தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இதற்கு பதிலடி தருகிற வகையில் இன்று காலையில் வடகொரியா 'பாலிஸ்டிக்' ரக ஏவுகணை ஒன்றை ஏவி சோதித்துள்ளது. வடகொரியா இன்று அதிகாலை மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய குறுகிய அளவிலான ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக தென்கொரியா தெரிவித்து உள்ளது.

ஜப்பான் பிரத்தியேக பொருளாதார மண்டலம் பகுதியில் அந்த ஏவுகணை பறந்தது போய் விழுந்தது என்று கடலோர காவல்படை கூறியது. இது ஜப்பானுக்கு அருகே, அதாவது வடக்கு ஹொக்கைடோவில் உள்ள ஒரு தீவில் இருந்து சுமார் 210 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த நிலையில் வடகொரியாவுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வடகொரியாவுக்கு எதிராக கடும் எதிர்ப்பை தெரிவித்தோம். இது போன்ற செயல்களை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com