

ஒசாகா,
ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், பிரான்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டுக்கு இடையே, பிரதமர் மோடி, மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.
நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த நிலையில், மாநாட்டின் 2-வது நாளான இன்று பிரதமர் மோடி, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பரஸ்பர நலன்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அதேபோல், பிரேசில் அதிபர் ஜெர் போல்சோனரோவையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.