உடல் நலப்பிரச்சினை: ஜப்பான் பிரதமர் அபே இன்று ராஜினாமா...?

உடல் நலப்பிரச்சினை காரணமாக ஜப்பான் பிரதமர் அபே இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உடல் நலப்பிரச்சினை: ஜப்பான் பிரதமர் அபே இன்று ராஜினாமா...?
Published on

டோக்கியோ

ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே உடல் நலப் பிரச்சினைகள் தொடர்பாக தனது ராஜினாமாவை அறிவிக்க உள்ளதாக வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்க உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

"அபே தனது நோய் மோசமடைந்துள்ளதால் ராஜினாமா செய்ய விரும்புகிறார்,நாட்டை வழிநடத்துவதில் அது சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர் கவலைப்படுகிறார் என உள்ளூர் ஊடகம் தெரிவித்து உள்ளது.

பிரதமரின் உடல்நிலை குறித்த ஊகங்கள் பல வாரங்களாக பரவி வருகின்றன, ஆனால் குறிப்பிடப்படாத நோய் மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு இரண்டு தனித்தனி பயணங்களை மேற்கொண்டார். பின்னர் சமீபத்திய நாட்களில் காய்ச்சல் அதிகரித்து உள்ளது என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com