ஜப்பானில் எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்..? அதிர்ச்சி ஏ.ஐ. வீடியோ வெளியிட்ட அரசு

புஜி எரிமலை அடுத்த சில ஆண்டுகளில் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
டோக்கியோ,
ஜப்பானில் உள்ள மிக உயரமான மற்றும் பிரபலமான சுற்றுலாத்தலமான புஜி மலை, தூங்கி கொண்டிருக்கும் எரிமலை வகையை சேர்ந்தது. இது அங்குள்ள ஹோன்ஷூ மாகாணத்தில் அமைந்துள்ளது.
இந்தநிலையில் புஜி எரிமலை அடுத்த சில ஆண்டுகளில் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் அந்த நாட்டின் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்தநிலையில் புஜி எரிமலை வெடித்து சிதறுவது போன்ற ஏ.ஐ. வீடியோ ஒன்றை அந்தநாட்டின் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்தவீடியோவில் புஜி எரிமலை வெடிப்பால் ஏற்படும் பயங்கரங்கள், மக்கள்படும் அவதிகள், நோய் பரவல்கள் மற்றும் எரிமலையில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய தகவல்கள் உள்ளன. இந்த வீடியோ ஜப்பான் மட்டுமின்றி உலகநாடுகளிடையே வைரலாகி வருகிறது.






