ஜப்பானில் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேயின் நினைவுதினம்

ஜப்பானில் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேயின் நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜப்பானில் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேயின் நினைவுதினம்
Published on

ஜப்பான் நாட்டின் நீண்ட கால பிரதமராக இருந்த பெருமைக்குரியவர் ஷின்ஜோ அபே. இவர் கடந்த ஆண்டு அங்குள்ள நாரா என்ற பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது டெட்சுயா யமகாமி என்ற நபர் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். முன்னாள் பிரதமரான ஷின்ஜோ அபே கொலை செய்யப்பட்டு தற்போது ஓராண்டு முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் அங்குள்ள ஜோஜோஜி என்ற புத்த கோவிலில் அவரது நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் புமியோ கிஷிடா, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு அவரது புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com