சவுதி அரேபியாவில் 8 பேருக்கு மரண தண்டனை: ஒரே ஆண்டில் இதுவரை 230 பேருக்கு நிறைவேற்றம்


சவுதி அரேபியாவில் 8 பேருக்கு மரண தண்டனை: ஒரே ஆண்டில் இதுவரை 230 பேருக்கு நிறைவேற்றம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 4 Aug 2025 1:55 AM IST (Updated: 4 Aug 2025 12:56 PM IST)
t-max-icont-min-icon

சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரியாத்,

வளைகுடா நாடுகளில், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது

இந்நிலையில் சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கஞ்சா கடத்திய குற்றத்திற்காக, நாட்டின் தெற்கு பகுதியான நஜ்ரானில் 4 சோமாலியர்கள் மற்றும் 3 எத்தியோப்பியர்கள் தூக்கிலிடப்பட்டனர். மேலும், ஒரு சவுதி குடிமகன் ஒருவருக்கு, தனது தாயைக் கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சவுதி அரேபியாவில் இதுவரை 230 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் 154 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டனர். 2022ம் ஆண்டு 19 பேரும், 2023ம் ஆண்டு 2 பேரும், 2024ம் ஆண்டு 117 பேரும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டனர். கடந்த 2024ம் ஆண்டு 338 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக சவுதி அரேபியா கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனையை மீண்டும் அமல்படுத்தியது. இதற்கு முன் மூன்று ஆண்டுகளுக்கு இத்தகைய குற்றங்களுக்கு மரணதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story