சிரியா: கிளர்ச்சியாளர்கள் குண்டுவீச்சில், படை வீரர்கள் 18 பேர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய குண்டுவீச்சில், சிரியா படை வீரர்கள் 18 பேர் பலியாயினர்.
சிரியா: கிளர்ச்சியாளர்கள் குண்டுவீச்சில், படை வீரர்கள் 18 பேர் பலி
Published on

மாஸ்கோ,

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக ரஷியாவும் களத்தில் இறங்கி வான்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள வடக்கு லடாக்கியா மாகாணத்தில் சப்சாரா குடியிருப்பில் கிளர்ச்சியாளர்கள் குண்டு வீச்சு நடத்தினார்கள். இந்த குண்டு வீச்சில் அங்கு இருந்த சிரியா படை வீரர்கள் 18 பேர் உயிரிழந்தனர்.

கிளர்ச்சியாளர்கள் அலெப்போ, ஹமா நகரங்களை குறிவைத்து தொடர்ந்து குண்டு வீச்சு நடத்துவதாக சிரியா நல்லிணக்க ரஷிய மையத்தின் தலைவர் விளாடிமிர் சாவ்செங்கோ தெரிவித்தார். மேலும் டெயிர் இ ஜோர் மாகாணத்தில் சாலியாஹ் நகர பகுதியில் ரஷிய படைவீரர்கள் மனித நேய உதவியாக உணவுப்பொட்டலங்களை வினியோகித்ததாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com