கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான ஜோ பைடன் நலமாக உள்ளார் - டாக்டர் தகவல்

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நலமாக உள்ளதாக அவரது டாக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான ஜோ பைடன் நலமாக உள்ளார் - டாக்டர் தகவல்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெள்ளை மாளிகையில் உள்ள குடியிருப்பில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் 79 வயதாகும் ஜோ பைடனுக்கு மிகவும் தீவிரமாக பரவக்கூடிய உறுமாறிய ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது டாக்டரும், வெள்ளை மாளிகை கொரோனா தடுப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஆஷிஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இந்த வகை கொரோனாதான் அமெரிக்காவில் தற்போது அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் ஜோ பைடன் மிகவும் நலமாக இருப்பதாக டாக்டர்ஆஷிஷ் ஜா கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதிக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளது. எனினும் நமது தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் அதற்கு எதிராக சிறப்பாக செயல்படுகின்றன. எனவே தான் ஜனாதிபதி மிகவும் நலமாக இருக்கிறார். அவரது ரத்த அழுத்தம், சுவாச விகிதம், நுரையீரல் செயல்பாடு, உடல் வெப்ப நிலை அனைத்தும் சீராக உள்ளது" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com