பென்டகனில் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவரின் பெயர் பரிந்துரை!

பென்டகனில் உள்ள முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ரவி சவுத்ரியை ஜோ பிடன் பரிந்துரை செய்தார்.
பென்டகனில் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவரின் பெயர் பரிந்துரை!
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முன்னாள் விமானப்படை அதிகாரி ரவி சவுத்ரி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரை அமெரிக்க விமானப் படைகளின் நிறுவல்கள், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் உதவிச் செயலாளர் பதவிக்கு நியமனம் செய்ய ஜோ பிடன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பென்டகனில் வகிக்கப்போகும் இந்த முக்கிய பதவிக்கு முன்பு அவர் அமெரிக்க செனட் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

ரவி சவுத்ரி இதற்கு முன்பு அமெரிக்க போக்குவரத்துத் துறையில் மூத்த நிர்வாகியாக பணியாற்றினார். போக்குவரத்துத் துறையில் இருந்தபோது, அவர் நாடு முழுவதும் அமைந்துள்ள ஒன்பது பிராந்தியங்களின் விமானப் போக்குவரத்து நிர்வாக இயக்குநராகவும், மண்டலங்கள் மற்றும் மைய செயல்பாடு பிரிவுகளிலும் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்க விமானப்படையில் 1993 முதல் 2015 வரை கடமையாற்றிய அவர், விமானப்படையில் மூத்த அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார். மேலும் சி -17 விமானியாக பணிபுரிந்த போது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ள பல போர் நடவடிக்கைகள் மற்றும் பல உலகளாவிய விமான பணிகளையும் மேற்கொண்டார்.

ஒபாமா நிர்வாகத்தின் போது இவர், ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவுவாசிகள் பற்றிய ஜனாதிபதியின் ஆலோசனை ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com