கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ்சை எடுத்து கொண்ட ஜோ பைடன்

அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டது.
கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ்சை எடுத்து கொண்ட ஜோ பைடன்
Published on

டெலாவேர்,

அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன. இவற்றில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முதல் இடம் பிடித்து உள்ளது அந்த நாடு. இந்நிலையில், கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் பதவி ஏற்க இருக்கிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டு உள்ளது.

இதனை எடுத்து கொண்ட பின், மருந்து கிடைக்கும்பொழுது அதனை எடுத்து கொள்ளுங்கள் என தனது நாட்டு மக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com