அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டி - ஜோ பைடன்

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக ஜோபைடன் அறிவித்து உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டி - ஜோ பைடன்
Published on

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோபைடன் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் இருந்து வந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக ஜோபைடன் அறிவித்து உள்ளார். 3 நாள் பயணமாக அயர்லாந்து சென்றுள்ள அவர், அங்கு புறப்படுவதற்கு முன் இந்த தகவலை வெளியிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2-வது முறையாக போட்டியிடுவதற்கு தனது மனதை தயார்படுத்தி விட்டதாக கூறிய ஜோபைடன், தேர்தல் பிரசாரத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.முன்னதாக, குடியரசு கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் ஜனாதிபதியுமான டிரம்ப், 2024-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com