அமெரிக்க தேர்தலில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடேன் - ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமெரிக்க தேர்தலுக்கான அதிபர் வேட்பாளராக ஜோ பிடேனை, ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க தேர்தலில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடேன் - ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்பேதைய அதிபர் டொனால்டு டிரம்ப், 2-வது முறையாக பேட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜே பிடன் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் பேட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க தேர்தலுக்கான அதிபர் வேட்பாளராக போட்டியிட ஜோ பிடேனை, ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜோ பிடன் தனது டுவிட்டரில், அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வது எனது வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரை அதிகாரபூர்வமாக தேர்வு செய்யும் கட்சி மாநாடு, ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் ஜோ பிடன் அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி, மிச்சேல் ஒபாமா, டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்தார். அவர் ஒரு மிகத் தவறான அதிபர் என்றார். தலைமை பண்பு, நிலையான போக்குகள் அற்றவர் என்றும், குழப்பங்களை விளைப்பவர் என்றும் சாடினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com