சிரியாவில் ஜோர்டான் ராணுவம் தாக்குதல்; 20 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

இதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளை ஜோர்டான் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

சிரியாவில் ஜோர்டான் ராணுவம் தாக்குதல்; 20 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
Published on: 

அம்மான்

சிரியாவில் ஜோர்டான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜோர்டானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கராக் நகரில் உள்ள ஒரு கிரேக்க தேவாலயத்தில் கடந்த வாரம் இறுதிச்சடங்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு புகுந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த பயங்கர தாக்குதலில் 9 அப்பாவி பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளை ஜோர்டான் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

20 பயங்கரவாதிகள் பலி

பயங்கரவாத தாக்குதலுக்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாக, சிரியா நாட்டின் எல்லைக்குள் புகுந்த ஜோர்டான் நாட்டு வான்படை விமானங்கள், பதுங்கியிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து குண்டுமழை பொழிந்தன. உளவுத்தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த வான்வழி தாக்குதலில், 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜோர்டான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com