காபூல் ஓட்டல் தாக்குதல் 4வது நபரும் சிறப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார்

ஆப்கானிஸ்தானில் ஓட்டல் ஒன்றில் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் 4வது நபரும் சிறப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். #Kabul
காபூல் ஓட்டல் தாக்குதல் 4வது நபரும் சிறப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார்
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் நகரில் இன்டர்கான்டினென்டல் ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த 4 பேர் நேற்றிரவு துப்பாக்கி சூடு நடத்தினர்.

தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் துப்பாக்கி ஏந்திய 2 பேர் நேற்றிரவு சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் கட்டிடம் தீப்பிடித்து கொண்டது. அங்கு வசிப்போர் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் வேறு இடங்களுக்கு தப்பியோடினர்.

இத்தாக்குதலில் 5 பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் வரை காயமடைந்து உள்ளனர். பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட 41 வெளிநாட்டவர் உள்பட 153 பேர் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. 3வது நபர் இன்று கொல்லப்பட்ட நிலையில் 4வது நபரை சிறப்பு படையினர் இன்று சுட்டு கொன்றனர். இத்தகவலை உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு தலீபான் தீவிரவாதிகள் இந்த ஓட்டல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

#Kabul #Hotel

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com