

கொழும்பு
இலங்கையில் கண்டி - திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் நேற்றைய தினம் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே தற்போது நாடு முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஷ்ஷ நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் 10 நாட்களுக்கு அவசர கால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஷ்ஷநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.