அமெரிக்கா: கான்சாஸ் நகரில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி, 15 பேர் காயம்

அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்கா: கான்சாஸ் நகரில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி, 15 பேர் காயம்
Published on

கான்சாஸ் நகர்(அமெரிக்கா),

அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர்.

மதுபானக் கூடத்தில் நுழைவதற்கு வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்களை நோக்கி மர்மநபர் ஒருவர் சுட்டதாகவும், அதில் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த பெண் உட்பட 2 பேர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 15 பேர் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கன்சாஸ் நகர மேயர் குயின்டன் லூகாஸ் தனது டுவிட்டரில் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com