கென்யா: லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 15 பேர் பலி

கென்யாவில் லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 15 பேர் பலியாயினர்.
கென்யா: லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 15 பேர் பலி
Published on

நைரோபி,

கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ளது மசகோஸ் மாகாணம். இங்கு அமைந்துள்ள மாட்டூ பகுதியில் காரிஸ்சா- திகா நெடுஞ்சாலையில், இன்று அதிகாலை 5 மணி அளவில் மோசமான சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது.

தலைநகர் நைரோபிக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 11 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் 15 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com