கென்ய அதிபருக்கு ஆதரவாக காத்திருந்து முதல் ஆளாக வாக்களித்த 102 வயது மூதாட்டி

கென்ய அதிபருக்கு ஆதரவாக மழை மற்றும் முதிர்ச்சியை கருத்தில் கொள்ளாமல் 102 வயது பெண்மணி வரிசையில் காத்திருந்து முதல் ஆளாக ஓட்டு பதிவு செய்துள்ளார்.
கென்ய அதிபருக்கு ஆதரவாக காத்திருந்து முதல் ஆளாக வாக்களித்த 102 வயது மூதாட்டி
Published on

இந்த ஆதரவு ஜோமோவின் மகனான 55 வயது நிறைந்த உஹுரு கென்யாட்டாவுக்கும் தொடருகிறது.

கடந்த 2013ம் ஆண்டு நடந்த கென்ய அதிபர் தேர்தலில் வரிசையில் முதல் ஆளாக நின்று தனது வாக்கினை பதிவு செய்துள்ளார் லிடியா. நைரோபி நகருக்கு வெளியே பள்ளி கூடம் ஒன்றில் லிடியா வாக்களித்த அதே வாக்கு சாவடியில் அவரது அரசியல் ஹீரோவான உஹுரு கென்யாட்டாவும் வாக்களித்துள்ளார்.

வாக்கு சாவடிக்குள் நுழையும் முன்பு லிடியா, குளிர் மற்றும் வயது முதிர்வினால் ஏற்பட்ட நடுக்கம் ஆகியவற்றை புறந்தள்ளி விட்டு, அமைதி மற்றும் கென்யாட்டாவின் வெற்றிக்காக இறைவணக்கம் செலுத்தினார். அவருடன் தேர்தல் அதிகாரிகள் மற்றும் சக வாக்காளர்களும் இறைவனிடம் வேண்டி கொண்டனர்.

இதுபற்றி லிடியாவின் பேரனான 70 வயது நிறைந்த சைமன் கூறும்பொழுது, கென்யாட்டா மற்றும் அவரது தந்தை மீது லிடியா அதிக அன்பு கொண்டுள்ளார் என கூறியுள்ளார். சைமன், ஜோமோ கென்யாட்டா பல்கலை கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார்.

தொடர்ந்து அவர், கடந்த 2013ம் ஆண்டில் இருந்து அதிகாலை 3 மணியளவில் லிடியா எழுந்து விடுவார். அதிபர் தேர்தலில் கென்யாட்டா மற்றொரு முறை வெற்றி பெறுவதற்காக அவர் இறைவனிடம் வேண்டுதல் வைத்திடுவார். மற்ற எதனையும் விட கென்யாட்டா மீது அளவு கடந்து அன்பு கொண்டவர் லிடியா என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com