கென்யாவில் அணை உடைந்து விபத்து: 27 பேர் பலி

கென்யாவில் அணை உடைந்த விபத்தில், 27 பேர் பலியாகினர்.
கென்யாவில் அணை உடைந்து விபத்து: 27 பேர் பலி
Published on

நைரோபி,

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள நகுரு கவுண்டியில் படேல் என்ற அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டுவின் மதகுகள் உடைந்ததில், அணையில் இருந்த தண்ணீர் வெள்ளமாக பாய்ந்தது. தண்ணீர் கரையோரம் இருந்த வீடுகளையும் அடித்துச்சென்றது. நுற்றுக்கணக்கான வீடுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன. வீடுகளில் இருந்த மக்களும் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.

விரைந்து வந்த மீட்பு படையினர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர், மீட்பு பணியை மேற்கொண்டனர். தற்போது வரை 27 பேரின் உடல்கள் மீட்கபட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு இருக்கலாம் அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com