

வாஷிங்டன்
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 350 பேர் வரை பலியாகியுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 லட்சம் பேர் மீட்கப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்துள்ளன.
தற்போது மழை நின்றுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்களில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன.
கேரளாவில் மழை குறைந்து, வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இதனால் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
இந்த் நிலையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வகம் கேரளாவின் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளையும் அதற்கு முன் அங்கு எடுக்கபட்ட சேட்டிலைட் படங்களையும் வெளியிட்டு உள்ளது. வேப்பநாட் ஏரியைச் சுற்றியுள்ள பகுதியின் இரு செயற்கைக்கோள் படங்களும், ஆலப்புழா, கோட்டயம், சாங்கநேசரி மற்றும் திருவல்லா ஆகிய இடங்களும் அடங்கும்.
முதல் படம் பிப்ரவரி 6 ம்தே தி லேண்ச்ட் 8 செயற்கைக்கோள் மீது இயங்கும் லேண்ட் இமேஜர் (OLI) மூலம் எடுக்கப்பட்டது.இரண்டாவது படம், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சின் Sentinel-2 செயற்கைக்கோள் மூலம் ஆகஸ்ட் 22 அன்று எடுக்கப்பட்டதாகும்.
நீரின் அளவு - இருண்ட நீல வண்ணத்தால் குறிக்கப்பட்டது - இரண்டாவது படத்தில் உலர் புல் நிலத்தை முற்றிலும் மூடிமறைத்து உள்ளது.