அமெரிக்காவில் கிலாவியா எரிமலை வெடிப்பு - 1,000 அடி உயரத்திற்கு வெளியேறும் தீக்குழம்பு

எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல், அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்கா மீது பரவியுள்ளது.
அமெரிக்காவில் கிலாவியா எரிமலை வெடிப்பு - 1,000 அடி உயரத்திற்கு வெளியேறும் தீக்குழம்பு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. தீவிர செயல்பாட்டில் உள்ள எரிமலையான இது, சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுகிறது. கடைசியாக கடந்த 11-ந்தேதி இந்த எரிமலை வெடித்தது. இந்த நிலையில், கிலாவியா எரிமலை தற்போது மீண்டும் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளது.

இந்த வெடிப்பால் எரிமலையில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறி வருகிறது. அதில் இருந்து வெளியேறும் சாம்பல், அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்கா மீது பரவியுள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தேசிய பூங்கா மூடப்பட்டது. மேலும் எரிமலையைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com