சுமார் 625 அடி உயரத்திற்கு நெருப்பை வெளியேற்றிய கிலாவியா எரிமலை

1983ம் ஆண்டு முதல் எரிமலைக்குழம்பு தொடர்ந்து வெளியேறி வருகிறது.
சுமார் 625 அடி உயரத்திற்கு நெருப்பை வெளியேற்றிய கிலாவியா எரிமலை
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவு, பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. அமெரிக்க நிலப்பரப்பில் இருந்து தென்மேற்கே 2,000 மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள இந்த தீவு, எரிமலைகளுக்கு புகழ் பெற்றது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் ஆண்டு முழுவதும் இருக்கும். இங்குள்ள 5 பெரிய எரிமலைகளில் கிலாவியா ஒன்றாகும்.

1983ம் ஆண்டு முதல் எரிமலைக்குழம்பு தொடர்ந்து வெளியேறி வருகிறது. இந்த எரிமலை 4 ஆயிரம் அடி உயரம் கொண்டது.

இந்தநிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கனன்று கொண்டிருக்கும் கிலாவியா எரிமலையிலில் இருந்து சுமார் 625 அடி உயரத்திற்கு நெருப்பு குழம்பு பீறிட்டி கக்கி வருகிறது.

கிலாவியா எரிமலையில் இருந்து 44 வது முறையாக நெருப்பு குழம்பு வெளியேறியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் நச்சு வாயுக்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பு இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com