கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி: சீனாவுக்கு வடகொரிய அதிபர் பாராட்டு

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுள்ள சீனாவுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி: சீனாவுக்கு வடகொரிய அதிபர் பாராட்டு
Published on

பியாங்யாங்,

சீனாவின் உகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200 நாடுகளுக்கு மேல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் அமெரிக்கா, ஐரேப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

உலகளவில் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கி வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,71,884 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை விட அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரசால் 82,886 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4,633 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 77,993 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். சீனாவின் பல மாகணங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தியதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வடகொரியவின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற சீனாவுக்கு வடகொரிய அதிபர் கிம் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கிம் உடல் நலம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் விசாரித்தார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com