தந்தையின் பிறந்தநாள் விழா: மக்களை உறையும் குளிரில் நிற்க வைத்து தனக்கு மட்டும் ரகசிய ஹூட்டர்கள் வைத்துக் கொண்ட கிம் ஜாங் உன்?

வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜாங் 2 பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்கிழமை அன்று சமிஜியோன் நகரில் சிறப்பு கூட்டம் நடந்தது.
தந்தையின் பிறந்தநாள் விழா: மக்களை உறையும் குளிரில் நிற்க வைத்து தனக்கு மட்டும் ரகசிய ஹூட்டர்கள் வைத்துக் கொண்ட கிம் ஜாங் உன்?
Published on

சியோங்,

வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் 2-வின் பிறந்த தினம் (பிப்ரவரி 16) ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் கிம் ஜாங் 2 பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்கிழமை (பிப்ரவரி 15) அன்று சமிஜியோன் நகரில் சிறப்பு கூட்டம் நடந்தது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த ஜூலை 2019-க்குப் பிறகு வடகொரியாவில் நடந்த முதல் தேசிய கூட்டம் இதுவாகும்.

தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சம்ஜியோன் நகரம் அதிபர் கிம் ஜாங் உன்னின் அறிவுறுத்தலின் பேரில் சமீபத்தில் சீரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் முன்னாள் தலைவர் என்பதால் இந்த நாளில் பொதுமக்கள் மரியாதை செலுத்த வர வேண்டும் என்பது கட்டாயமாகும்.

இந்த நிலையில் வானவேடிக்கைகளுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்களை உறைய வைக்கும் குளிரில் நிற்க வைத்து தந்தையின் புகழ் பற்றி பேசிய அதிபர் அவருக்கும் அவருடன் மேடையில் இருந்த அவரது நண்பர்களுக்கு மட்டும் ரகசிய ஹீட்டர்கள் அமைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் குளிர் -15 டிகிரி செல்சியஸ் ஆகும். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எந்த வித கையுறையும் வெப்பமூட்டும் கருவிகளும் இல்லாமல் குளிரில் நின்று கொண்டிருந்ததை வெளியான புகைப்படங்கள் மூலம் அறிய முடிகிறது.

ஆனால் மேடையில் இருந்தவர்களுக்கு மட்டும் ரகசியமாக ஹீட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அந்த ஹீட்டர்களுக்கு மேடையில் விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்திற்கு கீழாக மின்இணைப்பு கொடுக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com