

வடகொரியா,
வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சி, நாட்டின் தலைவரான கிம் ஜாங் அன்னை மீண்டும் கட்சியின் பொதுச்செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளது. தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற கட்சியின் 9-வது மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
2011-ம் ஆண்டு வடகொரியா முன்னாள் தலைவர் கிம் ஜாங் இல் இறப்புக்கு பின்னர் அவருடைய மகன் கிம் ஜாங் அன்னை நாட்டின் உச்ச தலைவராக தொழிலாளர் கட்சி தேர்வு செய்தது. 2019-ம் ஆண்டு நாட்டின் உச்சப்பட்ச தலைவரே அனைத்து துறைகளுக்கும் தலைவர் என அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போதையை இந்த நடவடிக்கை வடகொரியாவில் கிம் ஜாங் அன்னின் முழுமையான அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
நாட்டின் அணு ஆயுத பலம் மற்றும் தற்காப்புத் திறனை மேம்படுத்தியதற்காக கிம் ஜாங் அன்னிற்கு இம்மாநாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக கிம் ஜாங் அன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.