உயிருடன் இருக்கிறார்...? 20 நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடகொரிய தலைவர்

20 நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடகொரிய தலைவர் கின் ஜாங் உன் .உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உயிருடன் இருக்கிறார்...? 20 நாட்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடகொரிய தலைவர்
Published on

சியோல்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் 20 நாட்களுக்கு பின் முதல் முறையாக பொது வெளியில் தோன்றியுள்ளார்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு பின் பொது வெளியில் தென்படாததால், அவர் இறந்துவிட்டதாகவும், இதய அறுவை சிகிச்சை காரணமாக அவரால் எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் தென்கொரியா அவர் ஆரோக்கியமாகவும், நலமுடனும் இருப்பதாகவும் கூறி வருகிறது. ஆனால் அவர் பொதுவெளியில் தென்படாத காரணத்தினால் பலத்த சந்தேகம் எழுந்து வந்தது.இந்நிலையில் கிம் ஜாங் உன், 20 நாட்களுக்கு பின் முதல் முறையாக பொதுவெளியில் தென்பட்டதாக, வடகொரியா அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டின் தெற்கு பியோன்கான் மாகாணத்தில் உள்ள நகரமான சன்சோன் நகரில் இருக்கும் ஒரு உரத் தொழிற்சாலை துவக்க விழாவில், வெள்ளிக் கிழமை கலந்து கொண்ட இவர், ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக வடகொரியாவில் ஊடகம் யோனகாப் தெரிவித்துள்ளது.

இந்த விழாவில் அவரின் சகோதரி கிம் யோங் ஜாங் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உர தொழிற்சாலையின் உற்பத்தி முறை குறித்து கிம் திருப்தி அடைவதுடன், நாட்டின் ரசாயனத் தொழில் மற்றும் உணவு உற்பத்தியின் முன்னேற்றத்திற்கு இந்த ஆலை குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது என்று குறிப்பிட்டதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அங்கிருக்கும் மத்திய வானொலி ஒன்றில் கிம் மீண்டும் தோன்றியது குறித்து பேசும் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அது குறித்த புகைபடமும் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com