தடைகள் இருந்தாலும் வட கொரியா அணு ஆயுத நாடாக ஆகும் - அதிபர் கிம் சபதம்

வட கொரிய அதிபர் கிம் தடைகள் இருந்தாலும் வட கொரியா அணு ஆயுத நாடாக ஆகும் என்று வட கொரிய அதிபர் ஜோங் - அன் கிம் சபதமிட்டுள்ளார்.
தடைகள் இருந்தாலும் வட கொரியா அணு ஆயுத நாடாக ஆகும் - அதிபர் கிம் சபதம்
Published on

சியோல்

தன் நாட்டின் இறுதி நோக்கம் அமெரிக்காவிற்கு இணையாகவுள்ள உண்மையான சக்தியாக விளங்குவதேயாகும் என்றார் கிம்.

வெள்ளியன்று ஜப்பானை கடந்து செல்லும்படி செலுத்தப்பட்ட ஹூவாசோங் -12 ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது மட்டுமின்றி வட கொரியாவின் அணு ஆயுத சக்தியினையும் அதிகரித்துள்ளது என்று கிம் கூறியதாக வட கொரிய அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஐநா கண்டனம்

ஐநா பாதுகாப்பு சபை வட கொரியாவின் ஏவுகணை சோதனை கடும் கோபத்தைக் தூண்டக்கூடியது என்று கூறியதோடு அச்சோதனையையும் கடுமையாக கண்டித்துள்ளது. ஒருமித்த கண்டனத் தீர்மானத்தை சீனாவும் ஆதரித்துள்ளது.

இதுவரை இரு முறை ஜப்பானை கடந்து செல்லும் வகையில் ஏவுகணை சோதனையையும், மிகப்பெரிய அணு ஆயுத (ஹைட்ரஜன்) சோதனையையும் வட கொரியா சமீபகாலங்களில் நடத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com