மன்னர் சார்லஸ் படத்துடன் இங்கிலாந்து பணம் வெளியீடு

மன்னர் சார்லசின் படத்துடன் கூடிய இங்கிலாந்து நாட்டின் பவுண்டு தாள்கள் ஜூன் மாதம் முதல் புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னர் சார்லஸ் படத்துடன் இங்கிலாந்து பணம் வெளியீடு
Published on

லண்டன்,

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லசின் படத்துடன் இங்கிலாந்து பணமான பவுண்டு வெளியாகும் என இங்கிலாந்து வங்கி அறிவித்தது. இந்தநிலையில் மன்னர் சார்லஸ் படத்துடன் கூடிய இங்கிலாந்து நாட்டின் பவுண்டு தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இங்கிலாந்து வங்கியின் கவர்னர் ஆண்ட்ரூ பெய்லி பக்கிங்காம் அரண்மனைக்கு நேரடியாக சென்று மன்னர் சார்லசிடம் அதனை காட்டி ஒப்புதலை பெற்றார். இங்கிலாந்து நாட்டு பணத்தின் தாள்களான 5,10,20 மற்றும் 50 பவுண்டுகளில் மன்னரின் படம் அச்சிடப்பட்டுள்ளன. வரும் ஜூன் மாதம் முதல் புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த ராணி எலிசபெத் படத்துடன் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பணநோட்டுகளுக்கு பாதிப்பு இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com