சவூதி அரேபியாவில் மன்னர் சல்மான் ஆஸ்பத்திரியில் அனுமதி

சவூதி அரேபியா மன்னர் சல்மான் ஜெட்டாவில் உள்ள மன்னர் பைசல் சிறப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோப்புப் படம் ANI
கோப்புப் படம் ANI
Published on

ஜெட்டா,

சவூதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சாத் (வயது 86) ஆவார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மார்ச் மாதம் அவரது இதய பேஸ்மேக்கரில் பேட்டரி மாற்றப்பட்டது.

இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள மன்னர் பைசல் சிறப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவ பரிசோதனைகளுக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரண்மனை அறிக்கையை மேற்கோள்காட்டி சவூதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், 2 புனித மசூதிகளின் காவலரை இறைவன் காக்கட்டும். அவர் நல்ல உடல் நலத்தையும், நல்வாழ்வையும் பெறட்டும் என்று கூறப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய புனித தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com