கொலம்பியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 273 ஆக உயர்வு

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா.
கொலம்பியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 273 ஆக உயர்வு
Published on

பகோடா,

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்நாட்டில் கடந்த திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டின் தலைநகர் பகோடாவில் இருந்து மேற்கு 400 கி.மீ. தொலைவில் சான் ஜோஸ் டெல்பால்மர் பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

273 பேர் பலி

இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 3,800 பேர் படுகாயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தில் சிக்கி 377 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com