வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - தென்கொரியா தகவல்

தென்கொரிய அதிபர் தேர்தலுக்கு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி அதிரவைத்துள்ளது.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - தென்கொரியா தகவல்
Published on

பியாங்யாங்,

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் ஏவுகணைகள் ஆகியவற்றை அடிக்கடி சோதித்துப் பார்த்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்துவருவதை வடகொரியா வாடிக்கையாக கொண்டுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார தடைகளை பொருட்படுத்தாது தொடர்ந்து அடாவடி நடவடிக்கையில் வடகொரியா ஈடுபட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

அந்த வகையில், கொரிய தீபகற்பத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள கடலை நோக்கி வடகொரியா ஏவுகணை ஏவி சோதனை நடத்தியிருப்பதாக அப்பிராந்தியங்களில் உள்ள ராணுவ அமைப்புகள் தெரிவித்துள்ளன. தென்கொரியாவில் அதிபர் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com