அமெரிக்கா இனவெறி வன்முறை: விசாரணைக்குழு அமைக்க கோரிக்கை

அமெரிக்காவில் நடைபெற்ற இனவெறி வன்முறைகளை அடுத்து விசாரணைக்குழு அமைக்க இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா இனவெறி வன்முறை: விசாரணைக்குழு அமைக்க கோரிக்கை
Published on

வாஷிங்டன்

வெர்ஜினியா மாகாணத்தில் இனவெறிக்கு எதிரான பேரணியில் வாகனத்தை செலுத்தி 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து வெள்ளை இனவாத, புதிய-நாஜி இயக்கத்தினரின் வன்முறை செயல்பாடுகளை தடுக்க தேசிய அளவில் சுதந்திரமான விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார்.

வன்முறைச் சம்பவங்களை சரியான முறையில் அதிபர் டிரம்பும், தலைமை வழக்கறிஞர் ஜெஃப் செஷன்ஸ்சும் கடுமையாக கண்டிக்கவில்லை என்பதால் பாரபட்சமின்றி விசாரணை நடத்த குழுவொன்றை அமைக்க மசோதா ஒன்றை கொண்டுவரவுள்ளேன் என்றார் ராஜா கிருஷ்ணமூர்த்தி. இந்த விசாரணை குழு நாடாளுமன்றத்திற்கு அறிக்கையை அளிக்கும். இப்பிரச்சினையும் அதற்கான தீர்வையும் எவ்வாறு சிறப்பாக தடுப்பது என்பதையும் அக்குழு தெரிவிக்கும் என்றார் அவர்.

பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவெறி தாக்குதலை கண்டித்துள்ளனர். இந்நிலையில் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான எஃப் பி ஐ மனித உரிமைகள் விசாரணையை துவங்கியுள்ளது. இனவெறியர்கள் உள்நாட்டு தீவிரவாதிகள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் ஏஞ்சல் கூறினார். அதிபர் அனைத்து தரப்பினரின் வன்முறையை கண்டிப்பதாக கூறியுள்ளார். ஆனால் இனவெறிக்கு ஒரு பக்கம் மட்டுமேயிருக்கிறது என்றும் ஏஞ்சல் கூறினார். அதிபர் வன்முறையை முழுமையாக கண்டிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com