குல்பூஷன் ஜாதவ் வழக்கு: பிப்ரவரியில் விசாரிக்கிறது சர்வதேச நீதிமன்றம்

குல்பூஷன் ஜாதவ் வழக்கு: பிப்ரவரியில் விசாரிக்கிறது சர்வதேச நீதிமன்றம்

குல்பூஷன் ஜாதவ் மீதான வழக்கை பிப்ரவரியில் சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
Published on

புதுடெல்லி,

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர் குல்பூஷன் ஜாதவ் மீதான வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதிமுதல் 21-ம் தேதிக்குள் விசாரணைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உளவு பார்த்ததாக கூறி, இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின்போது தூக்கு தண்டனை விதித்தது.

இதனை எதிர்த்து மத்திய அரசு தூதரக நடவடிக்கை, சர்வதேச அழுத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டுள்ளது. இந்தியா முறையிட்டதை தொடர்ந்து அவரது தூக்கு தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில்தான் குல்பூஷன் ஜாதவ் தொடர்பான வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் விசாரணைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com