இந்தியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளுடனான விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் - குவைத் அரசு அறிவிப்பு

கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து இந்தியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளுடனான விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என குவைத் அரசு அறிவித்துள்ளது.
இந்தியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளுடனான விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் - குவைத் அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. இதன் காரணமாக பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை ரத்து செய்தன. அந்த வகையில் குவைத் நாடும் இந்தியாவுக்கான பயணிகள் விமானப் போக்குவரத்தை கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்தது.

இந்நிலையில், இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து மீண்டும் இந்தியாவுக்கான விமான போக்குவரத்தை தொடங்குவதாக குவைத் அறிவித்துள்ளது. இது குறித்த் குவைத் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாம் எகிப்து, வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com