

குவைத்,
குவைத்தில் பல்வேறு வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர், ஒரே நாளில் நேற்று தூக்கில் போடப்பட்டனர்.
7 பேரில் ஒருவர், அரச குடும்பத்தை சேர்ந்த பைசல் அப்துல்லா அல் ஜப்பார் அல் சபா ஆவார். இவர், திட்டமிட்டு ஒருவரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்.
தூக்கில் போடப்பட்ட மற்றொரு குவைத் பிரஜை, ஒரு பெண் ஆவார். அவரது பெயர் நஸ்ரா அல் எனேஸி. தனது கணவர் 2வது திருமணம் செய்தபோது, திருமண பந்தலுக்கு தீ வைத்து, 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வழக்கில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மற்ற 5 பேரில் வங்காளதேசம், பிலிப்பைன்ஸ், எத்தியோப்பியா நாடுகளை சேர்ந்த தலா ஒருவரும், எகிப்து நாட்டை சேர்ந்த 2 பேரும் அடங்குவார்கள்.
குவைத்தில் கடைசியாக 2013ம் ஆண்டு ஒரே நேரத்தில் 3 பேர் தூக்கில் போடப்பட்டனர்.
அதற்கு பிறகு அங்கு அதிக எண்ணிக்கையிலானவர்கள் தூக்கில் போடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.