குவைத் துணை பிரதமர் பதவி நீக்கம்

பதவி நீக்கத்துக்கான காரணம் வெளியாகவில்லை.
குவைத் துணை பிரதமர் பதவி நீக்கம்
Published on

தோஹா,

குவைத் நாட்டின் துணைப்பிரதமராக இருந்தவர் இமாத் அதீகி. இவர் அந்நாட்டின் எண்ணெய் வளத்துறை மந்திரி பொறுப்பையும் கவனித்து வந்தார். இவரை பதவியில் இருந்து நீக்குவதாக குவைத் மன்னர் மிஷால் அல்-அகமத் அல்-ஜாபர் அல்-சபா அறிவித்துள்ளார்.

இந்த தகவலை குவைத் அரசு நடத்தும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. குவைத் நிதி அமைச்சரும், பொருளாதார விவகார அமைச்சருமான நூரா பசாமுக்கு எண்ணெய் வளத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுவதாகவும் மன்னர் அறிவித்துள்ளார். இந்த பதவி நீக்கத்துக்கான காரணம் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com