உக்ரைன் போர்: கருங்கடல் பிராந்தியத்தில் தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷிய படை

உக்ரைனுக்கு எதிராக கருங்கடல் பிராந்தியத்தில் தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தி உள்ளது.
Image Courtacy: AFP
Image Courtacy: AFP
Published on

கீவ்,

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷியா கருங்கடலில் போர்க்கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்டுள்ளதால் உக்ரைனின் தானியங்களை கடல்மார்க்கமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடை ஏற்பட்டுள்ளது.

இதற்கு தீர்வுகாண ஐ.நா. மற்றும் துருக்கி அரசு மேற்கொண்ட முயற்சியின் பலனாக தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷியாவும், உக்ரைனும் கடந்த வாரம் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தில் கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைன் துறைமுகங்களில் தாக்குதல் நடத்தமாட்டோம் என ரஷியா உறுதியளித்திருந்தது.

ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரத்திலேயே ரஷியா ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது.

உக்ரைனும், ஐ.நா.வும் இதை வன்மையாக கண்டித்த நிலையில் ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைப்பதாக கூறி தாக்குதலை ரஷியா நியாப்படுத்தியது.

இந்த நிலையில் கருங்கடலில் உள்ள உக்ரைன் பிராந்தியங்கள் மீது ரஷியா தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஒடசோ பிராந்தியத்தில் உள்ள பல கிராமங்களில் எண்ணற்ற குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக கட்டிடங்கள் மீது ஏவுகணைகள் வீசி தகர்க்கப்பட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com