பாகிஸ்தானில் நிலக்கண்ணி வெடி தாக்குதலில் பாதுகாப்பு படை அதிகாரிகள் 3 பேர் பலி

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலக்கண்ணி வெடி தாக்குதலில் 3 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டு உள்ளனர்.
பாகிஸ்தானில் நிலக்கண்ணி வெடி தாக்குதலில் பாதுகாப்பு படை அதிகாரிகள் 3 பேர் பலி
Published on

பலூசிஸ்தான்,

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஜியாரத் மாவட்டத்தில் மங்கி தம் பகுதியில் அந்நாட்டு துணை ராணுவத்தினர் சென்ற வாகனம் ஒன்று சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்ததில் பாதிக்கப்பட்டது.

அந்த வாகனம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 3 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, மீட்பு குழுவினர் மற்றும் பாதுகாப்பு படையினர் உடனடியாக சென்று உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதன்பின் அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com