இந்தோனேசியாவில் நிலச்சரிவு - 16 பேர் உயிரிழப்பு, 80-க்கும் மேற்பட்டோர் மாயம்

பலத்த மழை காரணமாக தேடுதல் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
ஜகார்த்தா,
இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிசாருவா என்ற பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி மாயமானதாக கூறப்படுகிறது.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பலத்த மழை காரணமாக தேடுதல் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்ட நிலையில், மோப்ப நாய்கள், டிரோன்கள் மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகளின் உதவியோடு தற்போது தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story






