

பிஜீங்,
சீனாவின் ஜிலின் மாகாணத்தின் சாங்கன் நகரில் உள்ல ஒரு பரபரப்பான நெஞ்சாலையில் ஓடும் லாரியில் இருந்து தப்பித்த ஏழு நாய்கள் கூட்டமாக நடந்து செல்லும் வீடியோ பேசும் பொருளாகி உள்ளது.
நாய் இறைச்சி கடை ஒன்றில் வேலை பார்க்கும் திருடர்கள் நாய்களை கடத்தி ஒரு லாரியில் அடைத்து கொண்டு சென்றுள்ளனர். அப்போது தான் 7 நாய்களும் லாரியில் இருந்து தப்பித்துள்ளன.
2 நாட்களில் 17.கி.மீ தூரம் பயணித்த அந்த நாய்கள் மீண்டும் தங்கள் உரிமையாளர்களிடம் வந்து சேர்ந்துள்ளன. நாய்கள் மீண்டும் திரும்பி வந்ததை நினைத்து உரிமையாளர் மகிழ்ச்சி அடைந்தார். சாலையில் வரும்போது அந்த நாய்களை கோர்கி நாய் வழி நடத்தி உள்ளது. இது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.