காட்டாட்சி அணுகுமுறை வெற்றி பெறாது; அமெரிக்காவை சாடிய சீன அதிபர் ஜின்பிங்

சர்வதேச விதிகளை பாதுகாக்கும் நாடு என்ற அடிப்படையில் சீனா தன்னை அடையாளப்படுத்தி கொண்டது.
காட்டாட்சி அணுகுமுறை வெற்றி பெறாது; அமெரிக்காவை சாடிய சீன அதிபர் ஜின்பிங்
Published on

பீஜிங்

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கடுமையான தாக்குதலை நடத்தின. தொடர்ந்து நடந்து வந்த தாக்குதல்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், 40 நாட்களாக நீடித்து வந்த பதற்றம் சற்று தணிந்தது. இதனையடுத்து, பாகிஸ்தானில் அமெரிக்கா, ஈரான் தரப்புக்கு இடையே நடந்த முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்த உத்தரவின்படி, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க படைகள் இலக்காக கொண்டு தயாராக உள்ளன. ஹார்மூஸ் ஜலசந்தியின் இரு புறங்களிலும் அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டு உள்ளன.

இதுபற்றி குறிப்பிட்ட சீன அதிபர் ஜீ ஜின்பிங், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஆபத்து நிறைந்தது. மற்றும் பொறுப்பற்றது என கூறினார். ஏற்கனவே பதற்றம் நிறைந்த பகுதியில் பதற்றம் அதிகரிப்புக்கான ஆபத்தும் உள்ளது என எச்சரித்து உள்ளார்.

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த ஜின்பிங், காட்டாட்சி அணுகுமுறைக்கு உலகம் திரும்ப கூடாது. உலக நாடுகள், பன்முக தன்மையை கடைபிடித்து, அமைதியையும், வளர்ச்சியையும் பாதுகாக்க கூட்டாக பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனால், சர்வதேச விதிகளை பாதுகாக்கும் நாடு என்ற அடிப்படையில் சீனா தன்னை அடையாளப்படுத்தி கொண்டது. இதேபோன்று, ஈரானுக்கு வான் பாதுகாப்பு ஆயுதங்களை வினியோகிக்கிறது என அமெரிக்கா தெரிவித்த குற்றச்சாட்டுகளையும் சீனா நிராகரித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com