சாம்சங் நிறுவன தலைவராக லீ ஜே யோங் தேர்வு

சாம்சங் நிறுவன தலைவராக லீ ஜே யோங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சியோல்,

தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல பன்னாட்டு நிறுவனமான சாம்சங், செல்போன், டிவி, ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் செயல் தலைவராக லீ ஜே யோங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சாம்சங் நிறுவனத்தை நிறுவிய லீ பியுங் பங் குடும்பத்தை சேர்ந்த 3-ம் தலைமுறை நபராவார். 54 வயதான லீ ஜே யோங் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்து வருகிறார்.

ஜே ஒய் லீ என்றும் அழைக்கப்படும் லீ ஜே யோங் உழல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்த நிலையில் தென்கொரியா அரசு கடந்த ஆகஸ்டு மாதம் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை வழக்கில் இருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com