செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் தேக்கம் இருப்பது கண்டுபிடிப்பு


செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் தேக்கம் இருப்பது கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2024 2:31 PM GMT (Updated: 13 Aug 2024 4:24 PM GMT)

செவ்வாய் கிரகத்தை நீர் உறைந்து இருக்கும் மேற்பரப்பை போல் இல்லாமல் திரவ நீரை தக்க வைக்கும் அளவுக்கு வெப்பநிலை இருக்கும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகத்–தில் என்ன இருக்கிறது என்பது பற்றி ஆராய்ச்சி பணிகளை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்டுள்–ளது. இந்த ஆராய்ச்சியில் அங்கு ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் இருப்பது தெரியவந்தது.தற்போது செவ்வாய்கிரகத்தில் திரவ நிலையில் நீர்த்தேக்கம் உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.நாசாவின் இன்சைட் லேண்டரால் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

செவ்வாய்கிரகத்தில் மேற்பரப்புக்கு அடியில் ஆழமாக மறைந்து இருக்கும் திரவ நிலையிலான ஒரு பெரிய நீர்தேக்கம் உலகளாவிய கடலில் முழு கிரகத்தையும் உள்ளடக்கும் அளவுக்கு அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 7.2 முதல் 12.4 மைல்கள் ( 11.5 முதல் 20 கி.மீ) வரை அமைந்துள்ள இந்த நீர் உடைந்த பாறைகளுக்குள் இடையில் தேங்கி நிற்கிறது.இதில் நீர் உறைந்து இருக்கும் மேற்பரப்பை போல் இல்லாமல் திரவ நீரை தக்க வைக்கும் அளவுக்கு வெப்பநிலை இருக்கும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.


Next Story