இங்கிலாந்தில் இந்தியாவில் இருந்து நர்சுகளை பணியமர்த்த திட்டம்

இதில் பெரும்பாலானோரை கேரளாவில் இருந்து தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இங்கிலாந்தில் இந்தியாவில் இருந்து நர்சுகளை பணியமர்த்த திட்டம்
Published on

லண்டன், 

இங்கிலாந்தின் வேல்சில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு சுமார் 900 நர்சுகளை இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருந்து நியமிக்க அங்குள்ள சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதில் பெரும்பாலானோரை கேரளாவில் இருந்து தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் இந்த நிதியாண்டில் மட்டும் 350 வெளிநாட்டு நர்சுகளை தேர்வு செய்ய வேல்ஸ் தேசிய சுகாதாரப்பணிகள் துறை தெரிவித்து உள்ளது. வெளிநாட்டு நர்சுகள் தேர்வு உடனடி மற்றும் அனுபவ அடிப்படையில் இருக்கும் என ஸ்வான்சீ பே பல்கலைக்கழக சுகாதாரத்துறை இயக்குனர் கரேத் ஹவல்ஸ் கூறியுள்ளார்.

இந்தியாவை தவிர பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் இருந்தும் நர்சுகளை பணியமர்த்த வேல்ஸ் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com