ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் - லண்டன் விமான நிலையத்தில் தொடக்கம்

தற்போது ஐரோப்பாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.
ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் - லண்டன் விமான நிலையத்தில் தொடக்கம்
Published on

லண்டன்,

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் பயணிகளுக்கு ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் நடைமுறையை அமல்படுத்தி உள்ளது. உமிழ்நீர் சோதனை மூலம் இந்த பரிசோதனை 102 பவுண்டுக்கு மேற்கொள்ளப்படுகின்றது. முதல்கட்டமாக விமான நிலையத்தின் 2 மற்றும் 5 வது முனையங்களில் இத்தாலி, ஹாங்காங் செல்லும் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சோதனை பிரிட்டன் அரசு நடத்தும் தேசிய சுகாதார சேவையை விட விரைவாக முடிவுகளை வழங்க முடியும் என்று ஹீத்ரோ விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது ஐரோப்பாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.

பயணிகள் பரிசோதனை செய்ய விரும்பினால் ஹீத்ரோ வருவதற்கு முன்பாகவே ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் புறப்படுவதற்கு முன்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் கட்டாயம் என இத்தாலி மற்றும் ஹாங்காங் நாடுகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com