

லாஸ் ஏஞ்சல்ஸ்,
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சில்வர் லேக் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நேற்று மாலை 5 மணியளவில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கு ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்தவர்களை பிணைக் கைதியாகப்பிடித்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து உள்ளூர் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் பொதுமக்களை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். பிணைக்கைதியாக சிலரைப் பிடித்து வைத்தருந்த பெண் ஒருவரை அவர் சுட்டதால் அந்தப்பெண் படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அந்த பெண் உயிரிழந்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் எரிக் கார்செட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
முன்னதாக அந்த மர்ம நபர் குடும்பத் தகராறில் தெற்கு லாஸ் ஏஞ்சல்சில் உள்ள வீட்டில், தனது பாட்டியையும் காதலியையும் சுட்டுவிட்டு காரில் வேகமாக வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் சில மணி நேர போராட்டத்திற்குப் பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.