

பாஸ்டன்,
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா காரணமாக, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்னும் பழைய நிலைக்கு சேவை திரும்பவில்லை.
இந்தநிலையில், அமெரிக்காவில் பாஸ்டன் நகரில், சர்வதேச விமான நிறுவனங்களின் அமைப்பான சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய அதன் தலைமை இயக்குனர் வில்லி வால்ஷ், கொரோனா காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டுரை சர்வதேச விமான போக்குவரத்து தொழிலுக்கு ரூ.15 லட்சத்து 7 ஆயிரத்து 500 கோடி இழப்பு ஏற்படும்.
இப்போது மீட்பு பாதைக்கு வந்து விட்டாலும், 2023-ம் ஆண்டுதான் லாபத்துக்கு திரும்புவோம். இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. இந்தியாவில் தற்போது தான், உள்நாட்டு விமான சேவை சற்று மேம்பட்டு உள்ளது என்று அவர் பேசினார்.